Tuesday, January 15, 2019

கல்வியாண்டில் 220 வேலை நாள்கள் பராமரிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

நடுநிலைப் பள்ளிகளில் ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 220 வேலை நாள்களைப் பராமரிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தில்லியில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கு தில்லி அரசின் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: கல்வி உரிமைச் சட்டத்தில் நடுநிலைப் பள்ளிகளில் 220 வேலை நாள்கள் பராமரிக்கப்பட வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதை அனைத்துப் பள்ளிகளின் முதல்வர்கள் பின்பற்ற வேண்டும் என இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது.






இந்த குறைந்தபட்ச பணி நாள்களை பராமரிப்பதை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பாகும். பணி நாள்கள், விடுமுறைகள் ஆகியவற்றுக்கு முன்கூட்டியே ஒப்புதல் அளிக்கப்படுகின்றன என்று அந்த உத்தரவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்படுப்படும் என்கிற உறுதிமொழியை கல்வித் துறைக்கு அளிக்குமாறும் பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News