வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விடுபட்டுப்போன பதிவுமூப்பை புதுப்பித்துக் கொள்வதற்கான கால அவகாசம் ஜனவரி 24-ம் தேதி முடிவடைகிறது. இதுவரை 77 ஆயி ரம் பேர் பதிவை புதுப்பித்துள்ளதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதிநிர்மலா சாமி தெரிவித் தார். பள்ளி, கல்லூரிகளில் இறுதி படிப்பை முடிப்பவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்வது வழக்கம்.
பட்டப் படிப்பு வரையிலான கல்வித்தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுகலை படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட தொழிற்கல்வி கல்வித்தகுதியை மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் (சென்னை மற்றும் மதுரை) பதிவுசெய்ய வேண்டும். இவ்வாறு பதிவுசெய்யும் பதிவுதாரர்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் பதிவை புதுப்பித்துவர வேண்டும். அப்போதுதான் பதிவுமூப்பு (சீனியா ரிட்டி) நடப்பில் இருக்கும். இல்லா விட்டால் அது காலாவதியாகி விடும். இந்த நிலையில், கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலகட் டத்தில் பதிவுமூப்பை புதுப்பிக்க தவறியவர்கள் மீண்டும் பதிவை புதுப்பித்துக்கொள்ள கடந்த 25.10.2018 முதல் 24.1.2019 வரை 3 மாதங்கள் தமிழக அரசு கால அவகாசம் வழங்கியது.
இதை பயன்படுத்தி, பதிவுமூப்பு விடுபட்ட வர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணைய தளத்தை (www.tnvelaivaaippu.gov.in) பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாகவும், சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்றும் பதிவை புதுப் பித்து வருகிறார்கள். இதுதொடர்பாக மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜோதி நிர்மலா சாமி கூறியதாவது:- வழக்கமாக இத்தகைய சலுகை 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அளிக்கப்படும். ஆனால், இந்த முறை தமிழக அரசு பதிவு தாரர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2011 முதல் 2016 வரை 6 ஆண்டுகளுக்கு பதிவை புதுப்பித்துக்கொள்ள சலுகை அளித்துள்ளது. இதுவரையில் ஏறத் தாழ 77 ஆயிரம் பேர் விடுபட்டுப் போன தங்கள் பதிவை புதுப்பித் துள்ளனர். அவர்களில் 59 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமாகவும், எஞ்சிய 18 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் புதுப்பித்துள்ளனர்.
ஏற்கெனவே அரசு அறிவித்த படி, இதற்கான காலஅவகாசம் ஜனவரி 24-ம் தேதி நிறைவடை கிறது. எனவே, மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் புதுப்பிக்க வேண் டிய பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் வரும் 24-ம் தேதிக் குள் புதுப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். படித்துமுடித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் சிரமப்படும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வரு கிறோம். இதில், ஏராளமான தனி யார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப் படும் பணியாளர்களை தேர்வு செய்துகொள்கின்றன. ‘வேலை வாய்ப்பு வெள்ளி’ என்ற இந்த புதிய திட்டத்தின் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி முதல் இதுவரையில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனியார் நிறுவ னங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
திறன் மேம்பாட்டுப் பயிற்சி மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்களை வேலைவாய்ப் புக்கு உகந்தவர்களாக மாற்றும் வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் திறன் மேம்பாட்டு அலுவலர்களை நியமித்துள்ளோம். இவ்வாறு ஜோதிநிர்மலா சாமி தெரிவித்தார்.
IMPORTANT LINKS
Saturday, January 19, 2019
Home
கல்விச்செய்திகள்
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விடுபட்ட பதிவுமூப்பை புதுப்பிக்க ஜன.24 வரை அவகாசம்
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விடுபட்ட பதிவுமூப்பை புதுப்பிக்க ஜன.24 வரை அவகாசம்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்