மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நாடு முழுவதும் பொறியியல் படிப்புப் படித்த 80 இலட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளதாகவும், தமிழகத்தில் ஒரு இலட்சத்து 68ஆயிரம் பேர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், மரம் வளர்க்கும் மாணவருக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 12 மதிப்பெண்கள் வழங்கும் முறையை அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்
IMPORTANT LINKS
Thursday, January 31, 2019
Home
கல்விச்செய்திகள்
மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை - அடுத்த கல்வியாண்டில் அறிமுகம்
மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை - அடுத்த கல்வியாண்டில் அறிமுகம்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்