Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, January 19, 2019

தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கு ஆன்லைனில் ஜன.31 வரை விண்ணப்பிக்கலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

தொலைதூரக் கல்வி படிப்பு களுக்கு ஆன்லைனில் விண்ணப் பிப்பதற்கான கடைசி நாள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை. (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பல்கலை. இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவு களில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு களை வழங்கி வருகிறது. மேலும், சிஏ, ஐசிடபிள்யூஏ, கம்பெனி செக்ரட்டரிஷிப் படித்துக்கொண்டி ருக்கும் மாணவர்களின் வசதிக்காக சிறப்பு பி.காம், எம்.காம் படிப்பு களும் வழங்கப்படுகின்றன.



மாணவர்களின் நலனை கருத் தில்கொண்டு ஜனவரி பருவத்துக் குரிய மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுகலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் (www.ignou.ac.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்கள் அறிய சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள இக்னோ பல்கலைக்கழக சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618438, 26618039. ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News