Thursday, January 31, 2019

8ம் வகுப்பு வரையில் இனி கட்டாய தேர்ச்சி இல்லை

8ம் வகுப்புவரை எந்த ஒரு மாணவரையும் "பெயில்" ஆக்குவதற்கு தடை விதித்து கடந்த 2009ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டது.



இந்த சட்டத்தில், தற்போதைய பாஜக அரசு திருத்தம் மேற்கொண்டது. இதன்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, வழக்கமான தேர்வு நடத்தப்படும். இதில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு, அடுத்த 2 மாதத்தில் மறுதேர்வு நடத்தப்படும். இதிலும், தோல்வி அடையும் மாணவ, மாணவிகள், "தேர்ச்சி பெறாதவர் என அறிவிக்கப்பட்டு" அதே வகுப்பில் பயில்வது கட்டாயமாகும்.
இந்த சட்டத்திருத்தத்திற்கு, பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

Popular Feed

Recent Story

Featured News