Monday, January 7, 2019

9ம் வகுப்பு முப்பருவ கல்வி அடுத்த கல்வியாண்டில் ரத்து

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஒரே புத்தகத்தை படித்து, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகளை எழுதும் பழக்கம் இருந்தது. புத்தகங்களை சுமந்து செல்லவும், அதிக பாடங்களை படிக்கவும், மாணவர்கள் சிரமப்படுவதாகக்கூறி, சில ஆண்டுகளுக்கு முன், முப்பருவ கல்வி முறையை அரசு செயல்படுத்தியது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவங்களுக்கும், தனித்தனியாக புத்தகங்களை வழங்கி, தேர்வுகள் நடத்தப்படுகின்றன.




கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்

Join Our WhatsApp Group Click Here

Join Our Facebook Page Click Here


ஒவ்வொரு பருவத்தேர்வு முடிந்ததும், அந்தப் பருவத்திற்குரிய பாடப்புத்தகம் தேவைப்படாது. அடுத்த பருவத்திற்குரிய பாடப்புத்தகத்தை படித்தால் போதும். ஆனால், 10ம் வகுப்பில், முப்பருவ கல்வி முறை இல்லை. ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையில் குறைந்த பாடங்களை படித்த மாணவர்கள், 10ம் வகுப்பில் மொத்தமாக அனைத்து பாடங்களையும் படிப்பதில் சிரமப்படுகின்றனர். இதனால் தரமும் குறைவதாக, ஆசிரியர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.




இதையடுத்து, 2019 - 20ம் ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ கல்விமுறையை ரத்து செய்ய, கல்வித்துறை முடிவு செய்தது. ஆனால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை தொடரும்.

Popular Feed

Recent Story

Featured News