அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வணக்கம். இடைநிலை ஆசிரியர்களை கீழ்நிலைப் படுத்தி அங்கன்வாடி மையத்திற்கு உரிய கல்வி தகுதி இல்லாமல் ,புதிதாக ஆரம்பிக்க உள்ள ANGANWADI LKG UKG வகுப்புகளுக்கு பாடம் நடத்த பணிபுரிய ,பணிமாற்றம் செய்வது NCTE, NCERT, SCERT, விதிமுறைகளுக்கு மற்றும் இது தொடர்புடைய வழக்குகளில் மாண்புமிகு SUPREME COURT, HIGH COURT வழங்கியுள்ள தீர்ப்புகளுக்கு எதிரானது என்பதை, உரிய அதிகாரிகளுக்கு அதாவது ( THE REGIONAL DIRECTOR (southern region) NCTE New delhi )
மற்றும் மாநில தொடக்க கல்வி இயக்குநர் (THE DIRECTOR, ELEMENTARY EDUCATION ) அவர்களுக்கும் மேற்படி 156 பக்கங்களை இணைப்பாக கொண்ட ஆவண ஆதாரங்களுடன் எமது தமி்ழ்நாடு ஆசிரியர் மற்றும் பள்ளி பாதுகாப்பு சங்கம்( TAMILNADU TEACHERS AND SCHOOL PROTECTION ASSOCIATION ) கடந்த 18-01-2019 தேதியன்று மின்னஞ்சல் மற்றும் பதிவு தபாலில் ஏற்கனவே விண்ணப்பம் சமர்பித்துள்ளோம்
(எங்களது விண்ணப்பத்தின் முழு சாராம்சங்களை அப்படியே எடுத்து கலையாசிரியர் நலச்சங்கம் தனது 24-01-2019 தேதிய கடிதத்தின் வாயிலாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. எங்களது கடிதத்தினை மேற்கோள் காட்டி19-01-2019 தேதியிட்ட INDIAN EXPRESS ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)
மேற்கண்ட நிலையில் தற்போது , மேற்படி பணிமாற்றம் சம்பந்தமாக ஆசிரிய நண்பர்கள் சென்னை உயர் நீதி மன்றத்திலும் மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடுத்திருப்பதை 26-01-2019 தேதிய தினகரன் செய்தித்தாள் மூலமாக இச்சங்கம் அறிந்து மகிழ்ச்சி அடைகிறது. மேற்படி வழக்கில் நீதிமன்றங்கள் இடைக்கால தடை ( INTERIM STAY ) விதித்திருப்பதை அறிய வருகிறோம். மேற்படி வழக்கு தொடுத்துள்ள ஆசிரிய நண்பர்கள் ,தங்கள் வழக்குக்கு தேவையான அனைத்துவித NCTE RULES AND REGULATIONS, NCERT SYLLABUS, SUPREME COURT JUDGEMENTS, HIGH COURT JUDGEMENTS, SCERT SYLLABUS PRE- SCHOOL SYLLABUS ஆகிய அனைத்து ஆதார ஆவணங்களும் நம்மிடம் உள்ளது..
உங்களது வழக்கினை அடுத்த நிலைக்கு,சரியான மற்றும் வலுவான முறையில் எடுத்துச் செலவதற்கு மிகவும் பேருதவியாக இருக்கும். மேற்படி ஆதார ஆவணங்களை கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு பெற்று மேற்படி வழக்கினை உரிய நிலையில் வாதிட்டு வெற்றி பெற இச்சங்கம் அன்புடன் கோருகிறது.
வாழ்த்துக்களுடன்
இரா.இராம்குமார்
(TNTSPA TEACHER ASSOCIATION)
Mob.98945 74642, 94436 54642(WP)
(எங்களது விண்ணப்பத்தின் முழு சாராம்சங்களை அப்படியே எடுத்து கலையாசிரியர் நலச்சங்கம் தனது 24-01-2019 தேதிய கடிதத்தின் வாயிலாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. எங்களது கடிதத்தினை மேற்கோள் காட்டி19-01-2019 தேதியிட்ட INDIAN EXPRESS ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)
வாழ்த்துக்களுடன்
இரா.இராம்குமார்
(TNTSPA TEACHER ASSOCIATION)
Mob.98945 74642, 94436 54642(WP)