Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 29, 2019

வரிசையில் நிற்க வேண்டாம்- ரயில் டிக்கெட் இனி ஜியோ ஆப்பில்.!

வரிசையில் நிற்க வேண்டாம்- ரயில் டிக்கெட் இனி ஜியோ ஆப்பில்.! ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் பயன்பெரும் வகையில் பல்வேறு வசதிகைளையும் அறிமுகம் செய்து வருகின்றது.

மேலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் பல்வேறு புதிய சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. இந்நிலையில், நாம் ரயில்வேயில் டிக்கெட் பெற கால் கடுக்க காத்து நிற்க வேண்டியது வரும். இதை தவிர்க்கும் பொருட்டு ஜியோ நிறுவனம் தனது மை ஜியோ ஆப்பில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வகையில் அறிமுகம் செய்துள்ளது.



இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஜியோ நிறுவனம்: ஜியோ நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் பல்வேறு அதிரடியான சலுகைகள் பொது மக்களை பெரிதும் கவர்ந்து இழுக்கின்றது.4ஜி வோல்ட் இ ரோமிங்: ஜியோ நிறுவனம் மட்டும் 4ஜியில் வோல்ட் இ ரோமிங் சேவையை துவங்கியுள்ளது. இது அனைத்து வாடிக்கையாளர்களும் கிடைக்கின்றது. மேலும், இதன் மேலும் அதிவேக இணையதள சேவையை பயன்படுத்த முடியும்.

கால் டிராப் பிரச்னை இல்லை:

சாலை மற்றும் ரயில் போக்குவரத்தின் போது, மற்ற நிறுவனங்களுக்கு கால் டிராப் பிரச்னை ஏற்பட்டது. ஆனால் ஜியோ நிறுவனத்திற்கு மட்டும் இந்த பிரச்னை ஏற்படவில்லை என்று டிராய் அறிவித்தது. சேவைகள்: ஜியோ நிறுவனம் ஏராளமான சேவைகளை வழங்கி வருகின்றது. வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகளையும் முன்னணிலையாக அறிமுகம் செய்து வருகின்றது.



ரயில்டிக்கெட் முன்பதிவுக்கு:

ஜியோ ரயில் ஆப்பை ஜியோ போன், ஜியோ போன் 2 வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் பிரத்தியேக அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜியோ போன்: இந்தியாவின் தரைவழி போக்குவரத்து ரயில் பயணமான ரயில்வே டிக்கெட் புக்கிங்கை ஜியோ போன், ஜியோ போன் 2 போன் மூலம் டிக்கெட் முன்பதிவு, பிஎன்ஆர் விபரங்களை பெற ஜியோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது . ஜியோஸ்டோரில் இந்த ஆப்பை டவுண்லோடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

ரயில் போக்குவரத்து தொடர்பான விவரங்கள்:

இரு மொபைல் மாடல்களிலும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட ஆப்கள் வழங்கப்பட்ட நிலையில், ரயில் சேவை தொடர்பான விபரங்களை ரிலையன்ஸ் ஜியோ வழிவகுத்துள்ளது.



ஜியோ போன் சிறப்பம்சங்கள்:

இந்த ஆப் மூலம் ரயில் பயண அட்டவனை, பி.என்.ஆர்., நிலவரம், டிக்கெட் பதிவு செய்த வரலாறு, முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து செய்வது, தட்கல் முன்பதிவு செய்ய ஜியோ ரயில் ஆப் பயன்படுகிறது. தற்போது இந்த ஆப் ஜியோ போன் , ஜியோ போன் 2 பயனாளர்களுக்கு jioStoreல் கிடைக்கின்றது.

Popular Feed

Recent Story

Featured News