Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 30, 2019

‘கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும்’ ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேட்டி

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.



இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், அன்பரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர்களை பணயம் வைத்து எங்களுடைய போராட்டத்தை நசுக்க பார்க் கிறார்கள். மாணவர்களின் படிப்பை வீணடிப்பது அரசாங்கமும், ஆளுங்கட்சியும் தான். எங்களை அழைத்து பேசினால் எங்களுடைய போராட்டம் குறித்து மறுபரிசீலனை செய்வோம்.

அழைத்து பேச வேண்டும்

9 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒரு கோரிக்கையும் நிறைவேற்ற முடியாது. வெறுங்கையோடு திரும்பி போங்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அடக்குமுறையை ஏவி விடுகிறார்கள். வேறு ஆட்களை நியமனம் செய்வோம் என்று சொல்வதால் பலர் பணிக்கு திரும்புகிறார்கள்.

பயமுறுத்தி பணிய வைக்கலாம் என்று பார்க்கிறார்கள். நாங்கள் அநியாயமாக எதையும் கேட்கவில்லையே?. முதல்-அமைச்சர், நிதி அமைச்சர் எங்களை அழைத்து பேச வேண்டும். முதல் நாளே அழைத்து பேசி இருந்தால் இந்த வேலைநிறுத்தம் இவ்வளவு தூரம் வந்து இருக்காது.



வேலைநிறுத்தம் தொடரும்

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால், தேர்தல் பணிகள், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதாக கல்வித்துறை தவறான தகவல்களை தெரிவிக்கிறது.

எங்களுக்கு ஆதரவாக சங்கங்களும் கரம் கோர்க்கின்றனர். எங்களுடையை கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் வேலைநிறுத்தம் முடிவடையும். அதுவரை வேலைநிறுத்தம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Popular Feed

Recent Story

Featured News