Wednesday, January 16, 2019

அங்கன்வாடி மையங்களில் மாண்டிச்சோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

அங்கன்வாடி மையங்களில் மாண்டிச்சோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்,



அங்கன்வாடி மையங்களில் மாண்டிச்சோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்,'' என தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் ஜோசப்சேவியர் தெரிவித்தார்.அக்கூட்டணி வட்டார பொதுக்குழுக் கூட்டம் சிவகங்கையில் நடந்தது. வட்டாரத் தலைவர் அய்யாச்சி தலைமை வகித்தார். முன்னாள் நகரத் தலைவர் ஜான்பிரிட்டோ, மாவட்ட பொருளாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் ஜீவானந்தம் வரவேற்றார்.



மாநிலத் தலைவர் பேசியதாவது:
எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படும் அங்கன்வாடி மையங்களில் உபரி இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும். குழந்தை உளவியலை முறையாக கற்ற மாண்டிச்சோரி பயிற்சி பெற்றோரை நியமிக்க வேண்டும்.மாவட்டங்களை பிரிக்கும்போதுதான் நிர்வாகம் சிறப்பாக நடக்கும். அதேபோல் பள்ளிக் கல்வித்துறையில் இருந்து, தொடக்கக் கல்வித்துறை தனியாக பிரிந்தது. தற்போது அவற்றை மீண்டும் இணைப்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர்.





இதனால் தொடக்கப் பள்ளி இணைப்பை கைவிட வேண்டும், This means that the primary school should drop the link, என்றார். நிர்வாகிகள் பெரியசாமி, மாசானம் பங்கேற்றனர். வட்டாரப் பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Popular Feed

Recent Story

Featured News

Back To Top