அரசுக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை உதவிப்பேராசிரியர்களாக பணிவரன்முறை செய்யும் தேர்வு அறிவிப்பு செயல்படுத்தப்படாததால் கவுரவ விரிவுரையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்வது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவையில் உயர்க்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் 2,334 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் அரசுக் கடந்த 7 ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,232 புதியப் பாடப்பிரிவுகள்,தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 29 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உதவிப்பேராசிரியர் காலியிடங்கள் காரணமாக, மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, முதல் சிப்ட்-1,883 கவுரவவிரிவுரையாளர்கள், 2வது சிப்ட்-1,661 கவுரவ விரிவுரையாளர்களில் உதவிப்பேராசிரியர் பணிக்கு சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு, பணி வரன்முறை செய்யப்படுவார்கள் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.
ஆனால் இதுவரை அந்த அறிவிப்பு செயல் வடிவம் பெறவில்லை. இந்நிலையில் 2009ம் ஆண்டு முதல் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்துக்கு அறிவிக்கை வெளியிட்டு, இனச்சுழற்சி அடிப்படையில் முறையாக பணிநியமனம் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு முதல் சட்டசபை கூட்டம் ஜன.2ம் தேதி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏற்கனவே 2010ம் ஆண்டு யுஜிசி விதிமுறைகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25 ஆயிரமும், 2017ம் யுஜிசி விதிமுறையின் படி ரூ.40 ஆயிரமும் சம்பளம் வழங்கப்பட வேண்டும். கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் யுஜிசி விதிகளுக்கு மாறாக, ரு.15 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டு யுஜிசி விதிகளின் படி, கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாநில அரசு தலா ரு.15.15 லட்சம் தர வேண்டும் என்று ஒருதரப்பு கவுர விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேரடியாக உதவிப் போராசிரியர் தேர்வு நடத்தப்பட்டால் அதில் தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு 50 சதவீத இடங்களை உள்ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று யுஜிசி தகுதி கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் போராடி வருகின்றனர்.
அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் 2,334 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,232 புதியப் பாடப்பிரிவுகள்,தொடங்கப்பட்டுள்ளது.
29 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.