'அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., அல்லது தேர்வு மூலம் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும்' என, தமிழ்நாடு அரசு கல்லுாரி பேராசிரியர்கள் கழக மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.மாநாடு, பாரதியார் பல்கலையில் நேற்று நடந்தது.
அய்பெக்டா தேசிய ஆசிரியர் அமைப்பு தலைவர் கேசப் பட்டாச்சார்யா துவக்கி வைத்தார். திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் முருகன் கூறுகையில், ''கற்பித்தல் பணி மட்டுமின்றி ஆராய்ச்சி பணிகளிலும் பேராசிரியர்கள் ஈடுபட வேண்டும். பல்கலை, கல்வி நிறுவனங்களில் இருக்கும் வசதியை கொண்டு, நம்மால் ஆக்கப்பூர்வமாக என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இன்றைய சூழலில், பல்துறைகளை ஒருங்கிணைக்கும் ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் சமூக மேம்பாட்டுக்கு அவசியம்,'' என்றார்.'காலிப்பணியிடங்களை முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் டி.ஆர்.பி., அல்லது தேர்வுகள் மூலம் வெளிப்படையாக நிரப்புதல்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாரதியார் பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஜெயக்குமார், மூட்டா பொது செயலாளர் நாகராஜன், மாநிலத்தலைவர் வீரமணி, பொது செயலாளர் தாமோதரன், துணை தலைவர் சிவப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.