Friday, January 18, 2019

சாம்பிராணி புகையில் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மைகள்

பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி மற்றும் சந்தனம் பயன்பட்டு வருகிறது. சரி அவைகளால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம் வாருங்கள்



இயற்கை நறுமணப்பொருட்களில் சக்தி அதிகமாக இருக்கும் . பொதுவாக காற்று நம் நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்கும் வல்லமை கொண்டது. அதனால் தான் இதய நோயாளிகளுக்கும், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் மருந்து கா ற்று வடிவில் கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட மருந்துதான் சாம்பிராணி.

நம் முன்னோர்களுக்கு ஒரு பழக்கம் இருந்து வந்தது அது நோய் வரும் முன் காக்கும் பழக்கம். நேரடியாக இதை செய்யக்கூடாது என்று சொன்னால் மனிதர்களாகிய நாம் அதை கேட்கமாட்டோம். அதற்காகத்தான் நம் முன்னோர்கள் சிலபல நல்ல காரியங்களை செய்ய ஆன்மீகம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தனர்.



இயற்கையான ஒவ்வொரு வாசனை பொருளுக்கும் ஒரு விசேஷ சக்தி உள்ளது என சித்த மருத்துவம் சொல்லுகிறது. சில நறுமணங்கள் அமைதிப்படுத்தும், சில நறுமணங்கள் அறிவைத்தூண்டும் , சில உடல் இறுக்கத்தை போக்கும், மேலும் சில நம்மை கலகலப்பாகி உற்சகப் படுத்தும். இப்படி இயற்கை நறுமணங்கள் எல்லாமே இயற்கை தந்த வரங்கள் ஆகும்.
பொதுவாக நறுமணங்களுக்கு நினைவை புதுப்பிக்கும் ஆற்றல் உண்டு. நினைவை இழந்த பலருக்கு நறுமண வைத்தியம் மூலம் நினைவாற்றல் கிடைத்து இருக்கிறது.


நறுமணத்தை நுகரும் பொது உமிழ்நீர் அதிகமாகசுரந்து பசி தூண்டப்படுகிறது. இது இயல்பாக நடைபெறுவதால் உடல் உறுப்புகளின் இயக்க சக்தி அதிகரிக்கிறது. உடல் வலி யை மறக்க வைக்கும் ஆற்றலும் இயற்கை நறுமங்களுக்கு உண்டு. மனதை ஒருமுகப்படுத்தவும் நறுமணங்கள் பயன்படுத்தப்படுகிறது . நல்ல சந்தன ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி இவை இரண்டையும் கொளுத்தி ஒரு நல்ல காற்றோட்டமுள்ள அறையில் வைத்துவிட்டு கண்களை மூடி 20 நிமிடம் அமர்ந்து இருந்தால் எவ்வளவு கடுமையான மன உளைச்சலும்போகும் . மனம் லேசாகும்.



பெண்களுக்கு சாந்த குணங்களை ஏற்படுத்த மலர்களின் நறுமணங்கள் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதின் உண்மையான நோக்கம் அதுதான். அரசர்களின் பட்டாபிஷேகம் கோவில் கும்பாபிஷேகம் போன்ற புனித காரியங்களில் அகில் மரத்தின் புகை பயன்படுத்தப்படுகிறது. பழைய காலத்தில் முனிவர்களும், மகா ன்களும் காடுகளை தேடிச்சென்று தவம் புரிவதற்கு மரம் செடி கொடிகளில் இருந்து கிடைக்கும் நறுமணமே காரணமாக இருந்து இருக்கின்றது.




அந்த மனம் மனதை சாந்தப்படுத்தி எளிதாக மனதை ஒருமுகப்படுத்தி தவத்திற்கு வலிமை சேர்க்கும். இப்போ து புரிந்திருக்கும் கோவில்களிலும் வீடுகளிலும் சாம்பிராணி ஊதுவத்தி ஏன் பயன்படுத்துகிறோம் என்று.

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல. அவர்களை புறக்கணிக்கும் நாம்தான் உண்மையான மூடர்கள். இப்பொது நாம் கம்ப்யூட்டர் சாம்பிராணி பயன்படுத்துகிறோம் அதை தவிர்த்து நாம்நாட்டு சாம்பிராணி பயன்படுத்துவது மிக நல்லது.

மாற்றம் என்பது நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்றுதான் ஆனால் அந்த மாற்றம் நம் நன்மைக்காக இருக்கவேண்டும்.
மேலும் சாம்பிராணி பற்றிய தகவல்







சாம்பிராணி என்பது பிராங்கின் சென்ஸ் எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின். இது மிக மெதுவாக இறுகி ஒளி புகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுமுடைய சம்பிராணியாக மாறுகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன் சேர்வராயன் மலைச்சரிவில் 500மீ - 700மீ உயரத்தில் காணப்படுகிறது. நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் இம்மரங்களிலில் இருந்து பால் அதிகமாக வடியும். ஆண்டு ஒன்றிற்கு 1 கி .கி வரையில் ஒரு மரத்திலிருந்து சாம்பிராணி பெற முடியும் .

Popular Feed

Recent Story

Featured News