Monday, January 7, 2019

இணைய குற்றங்களை தடுக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பெருகி வரும் இணைய வழி குற்றங்களை தடுப்பது குறித்து, தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், பொறியியல் படித்த மாணவர்களை, இணைய வீரர்களாக(சைபர் வாரியர்ஸ்) நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



அவர்களுக்கு, இணைய வழி குற்றங்களை தடுப்பது, குற்றவாளிகளை அடையாளம் காண்பது உள்ளிட்ட விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கை, சேலம் மாநகர போலீஸ், சோனா தொழில்நுட்ப கல்லூரி இணைந்து, அதே கல்லூரி வளாகத்தில், நேற்று நடத்தின.



அதில், சேலம் மாநகர கமிஷனர் சங்கர், குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஷியாமளாதேவி, இணைய வழி குற்றம் தடுப்பது குறித்து விளக்கி பேசினார். சென்னை பல்கலை இணைய தடயவியல் பேராசிரியர் கலா பாஸ்கர், வலைதள பாதுகாப்பு, இணைய தடயவியல் குறித்து விளக்கி பேசினார். இதில், 24 கல்லூரிகளைச் சேர்ந்த, 261 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களை, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News