Tuesday, January 15, 2019

மாணவர்களின் சுமையைக் குறைக்கும் கோச்சிங் முறை!

சிறு வயதில் இருந்தே டாக்டர், இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவுகளுடனே பெரும்பாலும் குழந்தைகள் வளர்கின்றனர். ஆனால், குழந்தைகள் வளர வளர... படிப்பு சம்பந்தமான பளு அதிகரிக்கிறது. இதனால் போர்டு தேர்வு, தங்களது கனவு படிப்புக்கான தேர்வு என இரண்டையும் சமாளிக்க மாணவர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
டாக்டர், என்ஜினியர் ஆக விரும்பும் மாணவர்கள் பள்ளியில், ஆசிரியர் நடத்தும் பாடங்களையும் படித்துக் கொண்டு, வெளியில் கோச்சிங் கிளாஸ்களையும் தவறாமல் அட்டென்ட் செய்து வருகின்றனர்.
மாணவர்களின் ஒரு நாள்!
சராசரியாக ஒரு மாணவருக்கு 7 மணி நேரம் தூக்கம் கட்டாயத் தேவையாக உள்ளது. உணவு, குளியல் என அவர்களின் அன்றாடப் பணிகளுக்கு இரண்டு மணி நேரத்தை ஒதுக்குகின்றனர். பள்ளியில் ஆறு மணி நேரம் செலவிடும் மாணவர்களுக்கு, பள்ளியில் கொடுக்கும் வீட்டுப் பாடங்களை முடிக்க சுமார் 2 மணி நேரம் தேவைப்படுகிறது. இது தவிர, 4 மணி நேரம் கோச்சிங் கிளாஸ், 2 மணி நேர பயணம், மேலும் 4 மணி நேர படிப்பு, இதற்கு நடுவே தங்களது பணிகளில் இருந்து அவர்களுக்குத் தேவையான ஒரு மணி நேரம் ரிலாக்சேஷன். ஹப்பப்பா... நினைத்துப் பார்க்கும் நமக்கே மூச்சு முட்டுகிறது. குத்துமதிப்பாக மதிப்பீடு செய்தாலே ஒரு நாளைக்கு 27 மணி நேரம் தேவையாக இருக்கும்போது, அவர்களுக்கு ஒரு நாளைக்கு வெறும் 24 மணி நேரம்தான் இருக்கிறது. மாணவர்கள் பள்ளிக்கு செல்வது அவசியம். அதேநேரம் கோச்சிங் கிளாஸ்களையும் அவர்களால் தவிர்க்க முடியாத நிலை இருக்கிறது. ஏனெனில் JEE/NEET தேர்வுகளுக்கு நிச்சயம் கோச்சிங் கிளாஸ் அத்தியாவசிய தேவையாக உள்ளது. இதனைப் புரிந்துக் கொண்ட மாணவர்கள், பள்ளி, கோச்சிங் கிளாஸ் மற்றும் வீட்டில் கொடுக்கும் அத்தனை அழுத்தங்களை தாங்கிக்கொண்டு படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.





மாணவர்களுக்கான தீர்வு...?
பள்ளி மற்றும் கோச்சிங் கிளாஸ் பாடங்களை ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் (பள்ளி நேரத்திற்கு பிறகு) எடுத்தால் மட்டுமே மாணவர்களின் அழுத்தத்தைக் குறைத்து, அவர்களுக்கான சரியான பாடத்திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இன்டிகிரேடட் கிளாஸ் மூலம் பள்ளி மற்றும் கோச்சிங் கிளாஸ் பாடங்கள் இரண்டும் சமநிலையில் நடத்தப்படும்போது, அதனை மாணவர்கள் கற்க வசதியாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. இது அவர்களின் சுமையை வெகுவாகக் குறைக்கிறது, டென்ஷன் இன்றி படிக்க வழிவகுக்கிறது. எனினும் CBSE பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு (கணிதம், இயற்பியல்) சற்று கடினம் என்பதால் மாணவர்கள் இடையே, நீட் தேர்வுக்காக நேரம் செலுத்துவது சவாலாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாநில கல்வி வாரியம் தனது புதிய பாடத்திட்டத்தில் தரம் உயர்த்தியும், பொது தேர்விற்கு மாணவர்கள் சிறப்பாக செயல்படும் வகையிலும் வடிவமைத்துள்ளது. அதனால் இனி வரும் போட்டித் தேர்வுகளில் மாநில பாடத்திட்டத்தில் பயின்று வரும் மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
MASTERJEE IIT அகாடமி:

இப்படியான பயனுள்ள பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு சில நிறுவனங்களே வழங்கி வருகின்றன. தற்போது ஸ்டேட் போர்டு, CBSE, ICSE பள்ளிகளுடன் இணைந்து இவ்வாறான கோச்சிங் முறையைப் பின்பற்றி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது வேலூரின் MASTERJEEகோச்சிங் இன்ஸ்டிடியூட். JEE/NEET பாடத்திட்டத்தை வழங்கும் MASTERJEE-ல், 6 முதல் 8ம் வகுப்பிற்கான ஃபவுண்டேஷன் கோர்ஸ், 9- 10ம் வகுப்பிற்கான ஒரு வருட கோர்ஸ் மற்றும் 11- 12ஆம் வகுப்பிற்கான 2 வருட கோர்ஸ் என மூன்றுவிதமான கோர்ஸ்கள் உள்ளன. இங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2010ல் 25ஆக இருந்தது. இப்போது (2018) 5000 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 770 மாணவர்களில் 564 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். 2018ம் ஆண்டு MASTERJEE IIT அகாடமியில் பயிற்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுள் 20 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளனர்.
அதில் 62 மாணவர்கள் CBSE, 7 மாணவர்கள் ICSE பாடத்திட்டத்திலும் பயின்றவர்கள். மேலும் 10 மாணவர்கள் நீட் சிறப்பு ரிப்போர்ட்டர் பிரிவில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. MASTERJEE IIT கோச்சிங் வகுப்புகளில் இணைய : 90034 34853, 0422 - 222 1853. மேலும் விவரங்களுக்கு www.masterjee.org

Popular Feed

Recent Story

Featured News