Monday, January 14, 2019

பள்ளிகளில் காலிப்பணியிடம் தலைமை ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை: பட்டியல் அனுப்ப சிஇஓக்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளிகளில், பதவி உயர்வு மூலம் தலைமைஆசிரியர்களை நியமிக்க பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.



தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வருகின்றன.இதில், நூற்றுக்கணக்கான மேல்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனை பதவி உயர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென மாநிலம் முழுவதும் உள்ள பதவி உயர்வு பெற தகுதியானவர்களின் விவரங்களை பட்டியலாக அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட சிஇஓக்கள் மற்றும் எஸ்எஸ்ஏ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 1.1.2019ம் தேதி நிலவரப்படி, அரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு, தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள், முதுகலை மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) மற்றும் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க வேண்டும்.



இதற்கென 2001 முதல் 2003ம் ஆண்டு வரை டிஆர்பிமூலம் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை பாட ஆசிரியர்கள், முதுகலை மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) விவரங்களை தர எண்,வருடத்துடன் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News