Saturday, January 19, 2019

புதுவை பல்கலை.யில் எம்.பி.ஏ. பன்னாட்டு வணிகவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பன்னாட்டு வணிகவியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை. நிர்வாகம் தெரிவித்தது.





இதுகுறித்து பல்கலை. நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
புதுவைப் பல்கலை.யில் பன்னாட்டு வணிகவியல் பாடத்தில் எம்.பி.ஏ. வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகள் அடிப்படையிலான இந்தப் படிப்பில் பன்னாட்டு நிதி மேலாண்மை, கலாசார மேலாண்மை, மனித வளம், பன்னாட்டு அளவிலான சர்வதேச சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு பாடங்கள் நடத்தப்படும்.



இந்தப் பாடப் பிரிவில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்ஸி. (கணிதம், கணினி அறிவியல், புள்ளி விவரங்கள்), பி.டெக். உள்ளிட்ட இளநிலைப் பட்டங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் பட்டப் படிப்பை முடித்திருந்தாலே போதுமானது.
மாணவர்கள் பொதுச் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் (கேட் -2018) பெற்ற மதிப்பெண்களுடன் இணைத்து வருகிற 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தகுதியுள்ள மாணவர்கள் வருகிற மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். வெளிநாடு வாழ் இந்தியவர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். எனினும், இந்தத் தகுதியின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மத்திய அரசின் இந்திய கலாசார துறை, மனித வள மேம்பாட்டுத் துறை மூலம் தகுந்த ஆவணங்களுடன் நேரிடையாக துறைத் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு புதுவைப் பல்கலை.யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் (WWW.pondiuni.edu.in) பார்த்து அறிந்து கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்

Join Our WhatsApp Group Click Here 

Join Our Facebook Page Click Here

Popular Feed

Recent Story

Featured News