Thursday, January 31, 2019

முதுநிலை மருத்துவப் படிப்புகள்: இன்று நீட் தேர்வு முடிவு வெளியீடு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின்றன. தேசிய தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.natboard.edu.in) அந்த முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.



நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கும், பட்டய மேற்படிப்புகளுக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை 2,500 இடங்கள் இருக்கின்றன.
தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி எதிர்வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 6-ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற்றது.



சென்னை, சேலம், கோவை உள்பட நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 148 மையங்களில் எம்.பி.பி.எஸ். பயின்ற மருத்துவர்கள் 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்நிலையில், அந்த முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகவுள்ளன.

Popular Feed

Recent Story

Featured News