Thursday, January 31, 2019

"அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்" -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து




அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அயல்நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. முதல் கட்டமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்கும் 50 அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த 20 -ம் தேதி, பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு அனுப்பியது. தம் கல்விச் சுற்றுலாவை முடித்து 30 -ம் தேதி தாயகம் திரும்பினர்.



அவர்களை வரவேற்கும் விதமாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி ஒன்றை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடுசெய்திருந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்லாந்து நாட்டின் பயோ அகாடமி சி.இ.ஓ, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Popular Feed

Recent Story

Featured News