Wednesday, January 9, 2019

புவி தன் ஈர்ப்பு விசையால் அனைத்துப் பொருட்களையும் ஈர்க்க புகை மட்டும் எப்படி மேல் நோக்கிச் செல்கிறது?

புவி தன் ஈர்ப்பு விசையால் அனைத்துப் பொருட்களையும் ஈர்த்துக்கொள்கிறது என்றால், புகை மட்டும் எப்படி மேல் நோக்கிச் செல்கிறது?





காற்றின் அடர்த்தி, புகையின் அடர்த்தியைவிட அதிகமாக இருக்கும். இதனால் புகையைவிட, காற்றின் மீது புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். அதனால் காற்று கீழ் நோக்கி இறங்கும். அடர்த்தி குறைந்த புகை மேல் நோக்கிச் செல்லும்.





அதாவது புவி ஈர்ப்பு விசையால்தான் புகை மேலே செல்கிறது. இந்தப் புகையைப்போலதான் மென்மையான நீராவியும் மேல் நோக்கிச் செல்கிறது. அது மேகமாக மாறி, பின்னர் மழையாகப் பொழிகிறது. புவி ஈர்ப்பு விசை இல்லாவிட்டால் புகையோ, நீராவியோ மேல் நோக்கிச் செல்லாது.

Popular Feed

Recent Story

Featured News