ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி குறுந்தகவல் செயலியை தகவல் பரிமாற்றம் செய்ய உலகம் முழுக்க பெரும்பாலானோர் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் செயலியை கொண்டு பயனர்கள் குறுந்தகவல், புகைப்படங்கள் மற்றும் க்களை உடனுக்குடன் அனுப்பிக் கொள்ள முடியும். எனினும், சில சமயங்களில் சில வகையான குறுந்தகவல்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுப்ப வேண்டியிருக்கும்.
வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை குறிப்பிட்ட நேரத்தில் சரியாக அனுப்ப தனிப்பட்ட அம்சம் எதுவும் இல்லை. There is no personal feature to send SMS messages at the specified time. எனினும், இவ்வாறு செய்ய பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கின்றன. இவற்றை கொண்டு குறுந்தகவல்களை நீங்கள் விரும்பும் தேதி, நேரத்தில் அனுப்பலாம்.
வாட்ஸ்அப் ஷெட்யூலர், டு இட் லேட்டர், ஸ்கெட் இட் போன்ற பல்வேறு செயலிகள் குறுந்தகவல்கள் மட்டுமின்றி புகைப்படங்கள் மற்றும் க்களை ஷெட்யூல் செய்யும் வசதியை வழங்குகின்றன.
வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஷெட்யூல் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
தேவையானவை:Requirements:
வாட்ஸ்அப் ஷெட்யூலர் செயலியை டவுன்லோடு செய்யவும்
செட்டிங்ஸ் ஆப்ஷனில் Accessibility -> Services வசதியை இயக்க அனுமதிக்க வேண்டும்
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
Follow the instructions:
1 - வாட்ஸ்அப் ஷெட்யூலர் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஏ.பி.கே. ஃபைல் மூலம் வலைதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
2 - இன்ஸ்டால் ஆனதும் செயலியை திறக்க வேண்டும்.
3 - செயலியின் கீழ்புறம் வலதுபக்கமாக இருக்கும் + ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
4 - இனி வாட்ஸ்அப் காண்டாக்ட் அல்லது வாட்ஸ்அப் க்ரூப் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
5 - அடுத்து குறுந்தகவலை அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
6 - இனி குறுந்தகவலை டைப் செய்ய வேண்டும்.
7 - இறுதியில் க்ரியேட் செய்யக் கோரும் பட்டனை க்ளிக் செய்தால் உங்களது குறுந்த்கவல் ஷெட்யூல் ஆகிவிடும்.
குறிப்பு: பயனர்கள் பல்வேறு குறுந்தகவல்களை ஷெட்யூல் செய்ய முடியும், எனினும் ஒரே நேரத்தில் அவை ஷெட்யூல் செய்திருக்க கூடாது.