Thursday, January 17, 2019

இதய நோய் வராமல் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களா…?.





மனித வாழ்வில் நாம் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும் என்றால் அதற்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதயம் என்பது நமது உடலில் உள்ள பாகங்களில் மிக முக்கியமான ஒன்று. இதயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு காத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு காத்து கொள்வதற்கு இந்த உணவுகளை உண்டாலே போதுமானது.

இதயத்தை ஆரோக்கியமாக காத்து கொள்ள சில உணவுகள் :
பாதாம் பருப்பு :

பாதாம் பருப்பு நமது உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. இது கொலஸ்ட்ராலை குறைக்கிறது. மேலும் இது உடல் எடையை குறைக்கிறது.




சர்க்கரை வள்ளிக்கிழங்கு:

கேன்சரை அளிக்கும் ஆற்றல் இந்த கிழங்கில் அதிகமாக உள்ளது. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் தருகிறது.
பூசணி விதை :

பூசணி நாம் அனைவரும் அறிந்த ஒரு ஆய்கறி தான். இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல ஆற்றல் உள்ளது. இதனை சாப்பிடுவதின் மூலம், மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சிறப்பாக செயல்பட வைக்கும்.
முட்டைகள் :




முட்டையில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. இதில் உலா சத்துக்கள் நமது உடலில் உள்ள பல கிருமிகளை அளிக்க உதவுகிறது. அதிக தரம் கொண்ட புரோட்டின் உள்ளது. வைட்டமின் ஏ, டி, கூடுதல் நார்ச்சத்து உடலை சீராக வைத்திருக்கும்.
அவரை வகை செடி :

இது இரத்தத்தில் உள்ள கிருமிகளை அளிக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்காமல் வைத்திருக்கும். இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தில் ரத்தத்தை குறைத்து, ஆரோக்கியமான வாழ்வைத் தரும்.



தக்காளி :

தக்காளி நாம் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஒரு காய்கறி தான். இதில் பல சத்துக்கள் உள்ளது. நமது தினசரி தேவையான வைட்டமின்களில் பாதியை தந்து விடும். வலி, சுருக்கங்கள், கருப்பு வளையங்கள் விழுவதை தடுக்கும்.
ஆப்பிள்:



ஆப்பிள் பழம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பழ வகை தான். இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. கேன்சர் வராமலிருக்க ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஹைபர் டென்ஷன், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் வராமல் கூடுதலாக தடுக்கும்

தமிழ்க்கடல் கல்விச் செய்திகளை உங்கள் WhatsApp குழுவில் பெற இணைவீர்: Click Here 
தமிழ்க்கடல் கல்விச் செய்திகளை உங்கள் Facebook குழுவில் பெற இணைவீர்: Click Here

Popular Feed

Recent Story

Featured News