மழை வரும்போது மட்டும் மண் வாசனை எப்படி வருகிறது ?
நாம் மண் வாசனை என்று சொன்னாலும் அது மண்ணிலிருந்து வரக்கூடிய வாசனை அல்ல.
மண்ணில் இருக்கும் ஆக்டினோமைசீஸ் என்ற பாக்டீரியாக்கள் மீது மழைத்துளி பட்டவுடன் வேதிவினை நடைபெறுகிறது.
இதனால் பாக்டீரியாக்களில் இருந்து இனிமையான மணம் வெளிவருகிறது. இதைத் தான் நாம் மண் வாசனை என்று அழைக்கிறோம்.