Tuesday, January 15, 2019

நிலாவில் இருந்து நேரலை செய்யும் விண்கலன்.! தெறிக்கவிட்ட சீனா.!


நிலா குறித்து ஆய்வு செய்ய பல்வேறு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன. நிலாவில் ஏராளமான தனிமங்களும், கனி வளங்களும் பொதிந்து கிடக்கின்றன. இந்நிலையில் அதில் உள்ள வளங்களை பூமிக்கு எடுத்து வர பல்வேறு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன.
இதற்காக பல்வேறு விண்கலன்களை விண்ணுக்கு அனுப்பி தகவல்களை பெற்று வருகின்றன.




இந்நிலையில் சீனா நிலாவுக்கு செயற்கைகோளை ஆய்வு செய்ய அனுப்பிபுள்ளது. அதில் இருந்து ஆய்வு செய்யும் பணிகளை நேரலையாகவும் வழங்குகின்றது.நிலவின் மறுபக்கம்:

நிலவின் மறுபக்கத்தை நாம் பூமியில் இருந்து பார்க்க முடியாது. பூமி தன்னைத்தானே சுற்றி வருகின்றது. மேலும் சூரியனையும் சுற்றி வருகின்றது.
நிலவும் பூமியை சுற்றுக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றது. மேலும் நாம் நிலவுலகத்தின் மீது வாழ்ந்து வருகின்றோம். இதனால் பூமியின் இருந்து நிலவின் மறுபக்கத்தை பார்க்க முடியாது.
சீனாவின் முதல் முயற்சி:




நிலவின் உள்ள மறுப்பக்கத்தில் விண்கலனை இறக்கி ஆய்வு செய்ய முடிவு செய்தது. இதற்காக முதன் முதலில் ஒரு விண்கலனை விண்ணுக்கு நிலவின் மறுபக்கத்திற்கு அனுப்பியது சீனா. இந்த முயற்சியை எந்த நாடும் பார்த்திராத வகையில் அமைந்தது.
அந்த விண்கலம் நிலவுக்கு பாதி தூரம் சென்று செயலிழந்தது. பிறகு பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு மீண்டும் ஒரு விண்கலனை விண்ணுக்கு செலுத்த தீர்மானம் செய்தது.
வெற்றி பெற்றது சீனா:




தோல்வியில் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தின் படி சேஞ்ச்-4 என்ற விண்கலனை ( ஆய்வு கலம்) வெற்றிகரமாக சீனா நிலவின் மறுபக்கத்தில் தரையிறக்கியது.
எந்த நாடும் நினைத்திராத வகையில் அமைந்தது. இதில் செயற்கைகோள்களில் பல்வேறு நாடுகளின் பங்களிப்பு இருக்கின்றது.
பல்வேறு நாடுகளும் சீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டன.

சாய்வாக விண்கலனை இறங்கியது:

நிலவில் ஆய்வு செய்ய சீனா தனது விண்கலனை சாய்வாக இறங்கி சாதனை படைத்தது. நிலவின் மறுப்பக்கத்தில் யாரும் இதுவரை கண்டிராத புகைப்படங்களை முன் முதலில் சீன விண்வெளி மையத்திற்கு அனுப்பியது.
அங்கு உயிர் வாழ்வதற்கான சூழ்நிலை இருக்கின்றாத என்றும் ஆய்வுகள் நடக்கின்றது. இதற்காக தனது விண்கலனை வித்தியசான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. புதிய பரிமாணத்தில் ஆய்வும் நடந்து வருகின்றது.
யாடு-2 ஆய்வுகலன்:




நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள அந்நாடு அனுப்பிய சேஞ்ச் -4 என்ற விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் இறங்கி உள்ளது. அதில் இருந்து இறக்கப்பட்ட யாடு -2 என்ற ஆய்வு கலம் நிலவின் தரையில் இறங்கி ஆய்வை மேற்கொண்டுள்ளது.
நேரலையில் கியூகியோ:

இந்த இரு கலங்களின் பணியை, கியூகியோ என்ற மற்றொரு விண்கலம் தொடர் நேரலை செய்து வருகிறது. இப்படி நிலாவில் மூன்று விண்கலங்களும் செயல்படும் புகைப்படங்கள், மற்றும் காட்சிகளை சீன விண்வெளி ஆய்வகம் வெளியிட்டுள்ளது.
பெருங்குழியில் ஆய்வு:

நிலவின் மறுபக்கத்தில் உள்ள பெருங்குழியில் ஆய்வு நடைபெறுவதாகவும், இந்த ஆய்வில், நிலாவின் தரையில் என்னென்ன தனிமங்கள் உள்ளன, அங்கு கதிர் வீச்சு எப்படி உள்ளது. சூழல் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் ஆராய்ந்து வருவதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.




வித்தியாசமான முயற்சி:

ஆய்வு செய்து வரும் பணிகளை தனது விண்கலன்கள் மூலம் நேரலையில் சீனா விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றன. இது விண்வெளி ஆய்வில் வித்தியாசமான முயற்சியாகவும் இருந்து வருகின்றது. சீனாவின் இந்த வித்தியாசமான முயற்சியை அனைத்து நாடுகளும் கண்காணித்து வருகின்றனர்

Popular Feed

Recent Story

Featured News