Tuesday, January 8, 2019

சி.பி.எஸ்.இ., செய்முறை தேர்வு அறிவிப்பு!!!

சென்னை: சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத் தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, பிப்., இறுதியில், பொது தேர்வு துவங்குகிறது. அதற்கு முன், செய்முறை தேர்வுகளை முடிக்க, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது. செய்முறை தேர்வுகளை, ஜன., 16 முதல், பிப்., 15க்குள் நடத்தி முடிக்க வேண்டும். மதிப்பெண் விபரங்களையும், பிப்., 15க்குள் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சன்யம் பரத்வாஜ் உத்தரவிட்டுள்ளார்.



Popular Feed

Recent Story

Featured News