Thursday, January 31, 2019

முதல் ஆண்டு அரியர் இருந்தால் இறுதி ஆண்டு படிக்க முடியாது: அண்ணா பல்கலை

2017ஆம் ஆண்டு புதிய தேர்வு முறைப்படி முதல் ஆண்டு முதல் செமஸ்டரில் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையாமல் அரியர் வைத்திருந்தால் அதனை அடுத்து வரும் பருவத்தில் எழுத முடியாது. ஓராண்டு காத்திருந்து மூன்றாவது பருவத்தில்தான் எழுத முடியும் என்ற நிலை இருந்தது. இந்த புதிய கட்டுப்பாடால், கல்வியாண்டிற்குள் அனைத்து பாடத் தேர்வுகளிலும் தேர்ச்ச பெற முடியாது எனக்கூறி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.



இந்த நிலையில் இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு, 2017 தேர்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தோல்வியடைந்த தேர்வை, அடுத்தடுத்த செமஸ்டர்களில் எழுதலாம். கட்டுப்பாடு தளர்த்தபட்டதால், இனி மாணவர்கள் ஒரு செமஸ்டரில் எத்தனை அரியர் வேண்டுமானலும் எழுத முடியும். இந்த திருத்தத்திற்கு அண்ணா பல்கலைக்கழக கூட்டமைப்பு ஒப்புதல் வழங்கியதும் உடனடியாக அமலுக்கு வருகிறது.



ஆனால் அதே நேரத்தில் வரும் கல்வியாண்டு முதல் புதிய கொள்கை ஒன்று வெளியிடப்பட உள்ளது. இந்த புதிய கொள்கையின்படி 2019-20-ம் கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் இனி முதலாம் ஆண்டு முதல் செமஸ்டரில் அரியர் இல்லாமல் இருந்தால் மட்டுமே 4வது ஆண்டில் பயில அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது

Popular Feed

Recent Story

Featured News