Thursday, January 10, 2019

பொங்கல் விடுமுறைக்கு பின் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி வகுப்பு அட்மிஷன்





பொங்கல் விடுமுறைக்கு பின் வரும் 18ம் தேதி முதல் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் செயல்படும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., யுகேஜி., வகுப்புகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 52 ஆயிரத்து 933 குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க ஒரு பெண் ஆசிரியையை நியமிக்க வேண்டும். பெண் ஆசிரியர் இல்லை என்றால் உபரியாக உள்ள ஆண் ஆசிரியர்களை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள், ஒரு நாளைக்கு 2 மணி நேரம் குழந்தைகளுக்கு பாடங்கள் நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டது.





இந்நிலையில், நேற்று அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி வகுப்புகள் துவங்குவது, மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடந்தது. சென்னையில் இருந்து கல்வித்துறை செயலர், சமூகநலத்துறை முதன்மை செயலர் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், திட்ட அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினர். இதில், நடுநிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் உபரி ஆசிரியர்கள், சீனியர் ஆசிரியர்களை வரும் 18ம் தேதிக்குள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்




Popular Feed

Recent Story

Featured News