04-03-2019 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் செயல்முறைகள்
ஒவ்வொரு ஆண்டும் தென்மாவட்டத்தில் வைகுண்டரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகின்றது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகின்ற மார்ச் 4_ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறந்து தென் மாவட்ட மக்களால் கடவுளாக வணங்கப்பட்டவர் ஐயா வைகுண்டர். இந்நிலையில் ஐயா வைகுண்டரின் பிறந்த நாள் வருகின்ற 4_ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதில் தென் மாவட்ட பகுதி மக்கள் வைகுண்டரை வணங்கி அவருக்கு படையல் வைத்து வழிபடுவார்கள்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் , ஐயா வைகுண்டர் பிறந்தநாளை முன்னிட்டுமார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் மாவட்ட விடுமுறைக்கு பதிலாக மார்ச் 9ஆம் தேதி முழு வேலை நாள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது