Tuesday, February 19, 2019

10 நாட்களில் பொதுத்தேர்வு : 27 லட்சம் பேருக்கு அனுமதி

தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், இன்னும், 10 நாட்களில், பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இதில், 27 லட்சம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 10 நாட்களில், பொது தேர்வுகள் துவங்க உள்ளன. மார்ச், 1ல், பிளஸ் 2வுக்கு, தேர்வு துவங்குகிறது. இதில், 7,068 பள்ளிகளைச் சேர்ந்த, 8.61 லட்சம் மாணவர்கள், தேர்வு எழுத அனுமதி தரப்பட்டுள்ளது.

இது தவிர, 23 ஆயிரத்து, 992 தனி தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக, 2,941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.மார்ச், 6ல், பிளஸ் 1 பொதுத் தேர்வு துவங்குகிறது. இந்த தேர்வில், 8.16 லட்சம் மாணவர்களும், 5,423 தனி தேர்வர்களும் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக, 2,912 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பத்தாம் வகுப்புக்கு, மார்ச், 14ல் பொது தேர்வு துவங்க உள்ளது. இந்த தேர்வில், 10.10 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக, 3,741 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வை, சிறை கைதிகள், 387 பேரும் எழுதுகின்றனர்.


அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தலைமையில், இணை இயக்குனர்கள், சேதுராம வர்மா, அமுதவல்லி ஆகியோர் இடம் பெற்ற குழு, பொதுத் தேர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.மாணவர்கள் விடை எழுதுவதற்கான, முதன்மை தாள் மற்றும் முகப்பு தாள்கள், தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அடுத்த வாரம், வினாத்தாள்கள் அனுப்பப்பட உள்ளன.தேர்வு மையங்களில், குடிநீர், கழிப்பறை, மின் விசிறி, மாணவர்களின் உடைமைகளை பாதுகாக்கும் அறை உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்ய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News