Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 14, 2019

வரலாற்றில் இன்று 14.02.2019

பெப்ரவரி 14 கிரிகோரியன் ஆண்டின் 45 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 320 (நெட்டாண்டுகளில் 321) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1349 – பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
1779 – ஹவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டான்.
1804 – ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான சேர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்ஜே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது.
1876 – எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.
1879 – சிலியின் இராணுவப்படைகள் பொலீவியாவின் அன்டோபகாஸ்டா நகரைக் கைப்பற்றினர்.
1900 – இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன.
1918 – சோவியத் ஒன்றியம் கிரெகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).
1919 – போலந்து-சோவியத் போர் ஆரம்பமானது.
1924 – ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.
1927 – யூகொஸ்லாவியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் இறந்தனர்.


1929 – சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று “அல் காப்போன்” என்பவனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் ஜப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது.
1946 – ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.
1956 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.
1961 – 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
1966 – அவுஸ்திரேலியாவில் முன்னர் பாவனையில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.
1979 – ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார்.
1981 – டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ர தீயில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
1987 – யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
1987 – தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி நிதர்சனம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1989 – ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.
1989 – யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.
1989 – சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ருஹொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.


1990 – பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர்.
1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.
2000 – நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.
2005 – லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
2005 – பிலிப்பீன்சில் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு 151 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1483 – சாகிருதீன் பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)
1869 – சார்ல்ஸ் வில்சன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர், (இ. 1959)
1898 – பிரிட்ஸ் ஸ்விக்கி, அமெரிக்க இயற்பியலாலர், வானியலாளர் (இ. 1974)
1939 – யூஜின் ஃபாமா, அமெரிக்கப் பொருளியல் நிபுணர்
1952 – சுஷ்மா சுவராஜ், இந்திய அரசியல்வாதி



இறப்புகள்

269 – புனித வேலண்டைன், உரமையில் வாழ்ந்த கத்தோலிக்க ஆயர்
1779 – ஜேம்ஸ் குக், பிரித்தானிய கப்பற் தளபதி, நாடுகாண்பயணி (பி. 1728)
1943 டேவிடு இல்பேர்ட்டு, செருமானியக் கணிதவியலர் (பி. 1862)
1968 – அ. ந. கந்தசாமி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1924)
1970 – ஹார்பட் ஸ்ரூட்விக், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1880)
1975 – பி. ஜி. வுட்ஹவுஸ், ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (பி. 1881)
2003 – டோலி, ஸ்கொட்லாந்து படியாக்கப்பட்ட ஆடு (பி. 1996)

சிறப்பு நாள்

காதலர் தினம்

Popular Feed

Recent Story

Featured News