Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 8, 2019

பள்ளி கல்வி துறையில் உள்ள 152 காலி பணியிடத்துக்கு இட ஒதுக்கீடு பிரிவினர் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பணியிடங்கள் நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பப்பட உள்ளதால், தகுதியுள்ள பட்டதாரிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:




பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளில், சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களில் எஸ்டிபிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் தகுதியுள்ள எஸ்டி பிரிவைச் சேர்ந்த சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.




அதேபோல, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கள்ள சீர்திருத்த பொது நிறுவனத்தில் எஸ்சி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 3 காலியாக உள்ளன. அவற்றை நிரப்பவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகளில் எஸ்டி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட 12 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.பள்ளிக்கல்வித்துறையில் எஸ்சி,எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட 116 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் கலை அறிவியல் கல்லூரிகளில் எஸ்டி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட 4 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.



மேற்கண்ட152 காலப் பணியிடங்களில் நேரடி நியமனம் மூலம் எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதியுள்ள மேற்கண்ட பிரிவுகளை சேர்ந்த ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கான தகுதிகள், ஊதியம் உள்ளிட்ட விவரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News