Sunday, February 17, 2019

வரலாற்றில் இன்று 17.02.2019

பெப்ரவரி 17 கிரிகோரியன் ஆண்டின் 48 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 317 (நெட்டாண்டுகளில் 318) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1753 – சுவீடன் கிரெகோரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளின் பின்னர் மார்ச் 1ற்கு மாறியது.
1788 – லெப்டினண்ட் போல் (Ball) என்பவன் சிட்னியில் இருந்து நோர்போல்க் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.
1854 – பிரித்தானியா ஒரேஞ்சு சுயாதீன நாட்டை விடுதலை பெற்ற நாடாக அங்கீகரித்தது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: எச்.எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் யூஎஸ்எஸ் ஹவுசட்டோனிக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: தென் கரோலினாவின் கொலம்பியா நகரம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் படைகள் வெளியேற்றத்தின் போது தீயிடப்பட்டது.


1867 – சூயஸ் கால்வாய் ஊடாக முதலாவது கப்பல் சென்றது.
1881 – இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டின் மொத்தத் தொகை 2,759,738, வட மாகாணத்தில் 302, 500, யாழ்ப்பாணத்தில் 40, 057 ஆகக் கணக்கெடுகப்பட்டது.
1890 – பிரித்தானிய நீராவிக்கப்பல் ஒன்று சீனக் கடலில் மூழ்கியதில் 400 பெர் கொல்லப்பட்டனர்.
1933 – நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.
1936 – சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.
1947 – வொயிஸ் ஒஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு விஸ்தரித்தது.
1957 – மிசூரியில் வயோதிபர் இல்லம் தீக்கிரையாகியதில் 72 பேர் கொல்லப்பட்டனர்.
1962 – மேற்கு ஜெர்மனியின் ஹம்பூர்க் நகரில் இடம்பெற்ர புயலில் 300 பேருக்கு எல் கொல்லப்பட்டனர்.
1979 – மக்கள் சீனக் குடியரசுக்கும் வியட்நாமுக்கும் இடையில் போர் ஆரம்பமாகியது.
1990 – இலங்கையின் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
1996 – பென்சில்வேனியாவில் இடம்பெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ கணினியை வென்றார்.
2000 – விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.
2006 – பிலிப்பீன்சில் சென் பேர்னார்ட் நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 1,000 பேருக்கு அதிகமானோர் உயிருடன் புதையுண்டனர்.



பிறப்புகள்

1888 – ஓட்டோ ஸ்டேர்ன், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (இ. 1969)
1927 – யுவான் அல்மெய்டா, கியூப புரட்சியாளர் (இ. 2009)
1984 – சதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1956 – எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (பி. 1891)
1986 – ஜே. கிருஷ்ணமூர்த்தி, தத்துவவியலாளர் (பி. 1895)
2014 – ஆர். கே. ஸ்ரீகண்டன், கருநாடக இசைப் பாடகர் (பி. 1920)

Popular Feed

Recent Story

Featured News