Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 14, 2019

நாளை சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு: 12.87 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்


கோப்புப்படம்
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வை 12.87 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.
நிகழ் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் பிப்ரவரி 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடைகிறது. அனைத்துத் தேர்வுகளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும். நாடு முழுவதும் 21,400 பள்ளிகளைச் சேர்ந்த 12 லட்சத்து 87ஆயிரத்து 359 மாணவ, மாணவிகள் தேர்வெழுதவுள்ளனர்.

இதற்காக 4,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் திருத்துதல், தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர், மேற்பார்வையாளர்கள் உள்பட பொதுத் தேர்வுப் பணிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தபடவுள்ளனர். வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளைத் தடுக்க நிகழாண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே தேர்வு முடிவு: மேலும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு வாரம் முன்னதாகவே வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News