Saturday, February 16, 2019

பள்ளிகள், கல்லுாரிகளில், வரும், 21ம் தேதி, தாய்மொழி தினம் கொண்டாட உத்தரவு

பள்ளிகள், கல்லுாரிகளில், வரும், 21ம் தேதி, தாய்மொழி தினம் கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும், கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில், ஆங்கிலம் பொது மொழியாகவும், பல மாநிலங்களில் ஹிந்தியும், சில மாநிலங்களில் மாநில மொழியும், அலுவல் மொழியாக உள்ளன.

மாநில மொழிகள் மற்றும் அவரவர் தாய்மொழியை கவுரவிக்கும் வகையில், தாய்மொழி தினத்தை விமரிசையாக கொண்டாட, மத்திய அரசு, மூன்று ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது.இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான, 'யுனெஸ்கோ' அறிவித்த, பிப்., 21ல், தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, அனைத்து கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் பள்ளிகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தாய்மொழியை கவுரவிக்கும் வகையில், யுனெஸ்கோ அறிவித்துள்ளபடி, வரும், 21ல், தாய்மொழி தினத்தை, மாணவர்களுடன் இணைந்து கொண்டாட வேண்டும்.

அன்றைய தினம், அனைத்து கல்வி நிறுவனங்களிலும், அந்தந்த மாநில மொழிகளில், பேச்சு, கட்டுரை, வினாடி வினா, ஓவியம், இசை உள்ளிட்ட போட்டிகளை நடத்த வேண்டும்.மாநில மற்றும், உள்ளூர் மொழி பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News