பெப்ரவரி 21 கிரிகோரியன் ஆண்டின் 52 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 313 (நெட்டாண்டுகளில் 314) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1440 – புரூசியக் கூட்டமைப்பு உருவானது.
1613 – முதலாம் மிக்கையில் ரஷ்யாவின் சார் மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
1804 – நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.
1848 – கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர்.
1907 – நெதர்லாந்தில் எஸ்.எஸ். பேர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
1918 – கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை சின்சினாட்டியில் இறந்தது.
1937 – முதலாவது பறக்கும் தானுந்து வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனல் போர் முடிவுக்கு வந்தது.
1947 – எட்வின் லாண்ட் முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.
1952 – கிழக்கு பாகிஸ்தானின் டாக்காவில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி மாணவர் நடத்திய எழுச்சிப் போராட்டம் ஒன்றின் போது காவற்துறையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நாள் பின்னர் யுனெஸ்கோவினால் அனைத்துலக தாய்மொழி நாள் என அறிவிக்கப்பட்டது.
1960 – பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.
1963 – லிபியாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் ஒன்றில் 500 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1965 – மல்கம் எக்ஸ் நியூயோர்க் நகரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1972 – சோவியத்தின் லூனா 20 சந்திரனில் இறங்கியது.
1973 – சினாய் பாலைவனத்தில் இஸ்ரேல் போர் விமானம் லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதில் 108 பெர் கொல்லப்பட்டனர்.
1974 – சூயெஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இஸ்ரேலியப் படைகள் வெளியேறின.
2013 – இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20 மேற்பட்டோர் உரிரிழந்தனர்.
பிறப்புகள்
1878 – அன்னை, இந்திய ஆன்மிகவாதி (இ. 1973)
1895 – கார்ல் பீட்டர் ஹென்ரிக் டாம், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1976)
1907 – எம். ஆர். ராதா, நகைச்சுவை நடிகர் (இ. 1979)
1924 – ராபர்ட் முகாபே, சிம்பாப்வேயின் முதலாவது அதிபர்
இறப்புகள்
1889 – இன்னாசித்தம்பி, யாழ்ப்பாணம் சில்லாலை புகழ்பெற்ற சுதேச வைத்தியர்
1926 – ஹெயிக் ஓனெஸ், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர், (பி. 1853)
1941 – பிரெடெரிக் பாண்டிங், நோபல் பரிசு பெற்ற கனடியர் (பி. 1891)
1965 – மல்கம் எக்ஸ், அமெரிக்க கறுப்பினத் தலைவர் (பி. 1925)
1968 – ஹோவார்ட் ஃபுளோரி, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலியர் (பி. 1898)
1984 – மிகயில் ஷோலகொவ், நோபல் பரிசு பெற்ற இரசிய எழுத்தாளர், (பி. 1905)
1999 – கேர்ட்ரட் எலியன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1918)
சிறப்பு நாள்
மொழிப்பற்றாளர் நாள் – வங்காள மொழி பேசுபவரினால் கொண்டாடப்படும் நாள்
அனைத்துலக தாய்மொழி நாள் – யுனெஸ்கோ