Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 23, 2019

வரலாற்றில் இன்று 23.02.2019

பெப்ரவரி 23 கிரிகோரியன் ஆண்டின் 54 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 311 (நெட்டாண்டுகளில் 312) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் புவெனா விஸ்டா நகரில் அம்ரிக்கப் படைகள் மெக்சிக்கோ படைகளைத் தோற்கடித்தன.
1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பியில் இராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது.
1887 – பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1893 – ருடொல்ஃப் டீசல் டீசல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.


1903 – கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது.
1904 – 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையைப் பெற்றுக் கொண்டது.
1905 – ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1917 – சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரி புரட்சி ஆரம்பமானது.
1919 – இத்தாலியில் பெனிட்டோ முசோலினி பாசிசக் கட்சியை ஆரம்பித்தார்.
1941 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது.
1944 – செச்னிய மற்றும் இங்குஷ் மக்கள் கட்டாயமாக மத்திய ஆசியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் தலைநகர் மணிலா அமெரிக்கப் படைகளினால் விடுவிக்கப்பட்டது.
1947 – அனைத்துலக தரநிர்ணய தாபனம் (ISO)ஆரம்பிக்கப்பட்டது.
1966 – சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.


1991 – தாய்லாந்தில் இராணுவத் தலைவர் சுந்தொங் கொங்சொம்பொங் தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் சட்டிச்சாய் சூன்ஹாவென் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1997 – ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
1998 – மத்திய புளோரிடாவில் இடம்பெற்ற சுழற்காற்றில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – இங்கிலாந்தில் கிறேரிக் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் கொல்லப்பட்டு 22 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்



1633 – சாமுவேல் பெப்பீசு, பிரித்தானியக் கடற்படைத் தளபதி (இ. 1703)
1868 – டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ், ஆபிரிக்க அமெரிக்க சமூக உரிமையாளர் (இ. 1963)
1915 – எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர்
1924 – அலன் கோர்மாக், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர். (இ. 1998)
1965 – மைக்கேல் டெல், டெல் நிறுவனத்த்தை ஆரம்பித்தவர்.
1954 – ராஜினி திராணகம, இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும். (இ. 1989)
1983 – அசீஸ் அன்சாரி, அமெரிக்க நடிகர்



இறப்புகள்

1503 – அன்னமாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1408)
1719 – சீகன் பால்க், ஜெர்மனிய மதகுரு (பி. 1682)
1821 – ஜோன் கீற்ஸ், ஆங்கிலக் கவிஞர் (பி. 1795)
1848 – ஜான் குவின்சி ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 6வது குடியரசுத் தலைவர் (பி. 1767
1855 – கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், கணிதவியலர் (பி. 1777)
1973 – டிக்கின்சன் ரிச்சார்ட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர். (பி. 1895)

சிறப்பு நாள்

புரூணை – விடுதலை நாள் (1984)
கயானா – குடியரசு நாள் (1970)

Popular Feed

Recent Story

Featured News