Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 25, 2019

வரலாற்றில் இன்று 25.02.2019

பெப்ரவரி 25 கிரிகோரியன் ஆண்டின் 56 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 309 (நெட்டாண்டுகளில் 310) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1797 – வில்லியம் டேட் தலைமையிலான 1000-1500 போர்வீரர்களைக் கொண்ட படைகள் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர்.
1836 – சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.
1837 – தோமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.
1921 – ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசி ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
1925 – சோவியத் ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது.


1932 – அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: துருக்கி ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
1948 – செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
1956 – சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தைக் கண்டனம் செய்தார்.
1980 – சூரினாமில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
1986 – பிலிப்பீன்ஸ் அதிபர் பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ அதிபரானார்.
1988 – மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிருதிவி ஏவப்பட்டது.
1991 – வளைகுடாப் போர்: ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவுதி அரேபியாவின் டாஹ்ரான் நரைல் அமெரிக்க இரணுவத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.


1992 – அசர்பைஜானின் நகர்னோ-கரபாக் பகுதியில் ஆர்மேனிய இராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர்.
1994 – மேற்குக் கரை நகரான ஹெப்ரோனில் மசூதி ஒன்றில் இஸ்ரேலியரான பரூக் கோல்ட்ஸ்டெயின் என்பவர் சுட்டதில் 29 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 125 பேர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த பாலஸ்தீனர்கள் கொலையாளியை அடித்துக் கொன்றனர். இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் 26 பாலஸ்தீனர்களும் 9 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
2006 – உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.


2007 – ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி (Rosetta Space Probe) முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் (Mars Fly-by) அப்பால் எறியப்பட்டது.

பிறப்புகள்

1915 – எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (இ. 2006)
1982 – தனுஷ், தமிழ்த் திரைப்பட நடிகர்.

இறப்புகள்



2001 – சேர் டொனால்ட் பிறட்மன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் (பி. 1908)
2004 – நாகிரெட்டி, இந்திய திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர், (பி. 1912)
2015 – அ. வின்சென்ட், திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928)

சிறப்பு நாள்

குவெய்த் – தேசிய நாள்
பிலிப்பைன்ஸ் – மக்கள் எழுச்சி நாள் (1986)

Popular Feed

Recent Story

Featured News