Sunday, February 17, 2019

2-வது ஜே.இ.இ. தேர்வு

என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு அமைப்பு ஜே.இ.இ. 2-வது முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எப்.டி., ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்.சி. போன்ற மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேர உதவும் ஜே.இ.இ. தேர்வை பிளஸ்-2 படித்து முடிப்பவர்கள் எதிர்கொள்ளலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் மார்ச் 7-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை www.nta.ac.in மற்றும் www.jeemain.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

Popular Feed

Recent Story

Featured News