புதுக்கோட்டை,பிப்.14 : புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை வேளாண்மைக்கல்லூரியில் நூலக புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.கணேஷ் தனது விருப்பநிதியின் மூலம் வாங்கப்பட்ட ரூ.2 இலட்சம் மதிப்பிலான புத்தகங்களை கல்லூரி நூலகத்திற்கு வழங்கினார்.
விழாவின் போது கல்லூரி முதல்வர் கு.சிவசுப்பிரமணியன்,மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்பையா ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாணவர் மன்ற ஆலோசகர் முனைவர் அ.குருசாமி செய்திருந்தார். விழாவின் முடிவில் கல்லூரி மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது..