பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும் நிலையில், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, விடைத்தாளில் முகப்புத் தாள் தைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10 -ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடப்பாண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு மார்ச் 1-இல் தொடங்கி மார்ச் 19-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 6 முதல் 22-ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 14 முதல் மார்ச் 29-ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. பொதுத் தேர்வு தொடங்க இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் ஒவ்வொரு பள்ளியிலும் தீவிரமாக நடந்து வருகிறது.
திருத்தணி கல்வி மாவட்டம் முழுவதும் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ள 20 தேர்வு மையங்களில் நடப்பாண்டு, பள்ளியில் படிக்கும் மாணவர்களும், 2 தேர்வு மையங்களில் தனித் தேர்வர்கள் தேர்வு எழுத மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள், முகப்புத்தாள்கள் வழங்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்க அந்தந்த மையப் பொறுப்பாளர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தா.ராஜேந்திரன் அறிவுறுத்தினார்.
இதில், திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாளில் முகப்புத் தாள் தைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்களை நியமிக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.