Sunday, February 3, 2019

போராட்டத்தில் ஈடுபட்ட 3,000 பேர் பணியிட மாறுதல்: நடவடிக்கைகளை திரும்ப பெற ஆசிரியர்கள் வலியுறுத்தல்

போராட்டத்தில் ஈடுபட்ட 3,000 அரசுப் பள்ளிஆசிரியர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 1,900-க்கும் அதிக மான ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், கடந்த 29-ம் தேதி இரவு காலக்கெடுவுக்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர் களுக்கு பணியிட மாறுதல் அளிக்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில் இதுவரை 3,000 ஆசிரியர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரி கிறது. ஆசிரியர்களை பணி யில் சேர விடாமல் அலைக்கழிப் பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘மாணவர்களின் நலன் கருதி யும், அரசின் கோரிக்கையை ஏற்றும்தான் பணிக்குத் திரும் பினோம்.ஆனால், பழிவாங்கும் நோக் கத்துடன் ஆசிரியர்கள் மீது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மாநிலம் முழு வதும் 3,000-க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். புதுக் கோட்டையில் மட்டும் 600 பேர் மாறுதல் செய்யப் பட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர் களைத் தவிர்த்து தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது முதன் மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.சிலருக்கு இடமாறுதல் வழங் கிய பின் பணியிடைநீக்கம் செய்கின்றனர்.



நடவடிக்கைகள் எடுக்கப் பட்டதில் 50 சதவீதம் பேர் ஆசிரியைகளாவர். இத னால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலில் தவிக்கின்ற னர். எனவே, ஆசிரியர்கள் மீதான அனைத்து நடவடிக்கை களையும் அரசு திரும்ப பெற வேண்டும்’’ என்றனர். இதற்கிடையே ஆசிரியர் கள் போராட்டத்தை சமாளிக்க ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நிய மிக்க அரசு முடிவு செய்தது. அதற்காக மாநிலம் முழு வதும் ஆயிரக்கணக்கான பட்ட தாரிகள் விண்ணப்பித்திருந் தனர். காலியிடங்கள் அடிப் படையில் 500 பேருக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது.ஆனால், ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியதால் தற் காலிக ஆசிரியர்கள் பணி செய்ய அனுமதிக்கப்பட வில்லை.



சிலருக்கு மட்டும் ஓரிரு நாட்கள் பாடம் நடத்த வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் போராட்டத் தில் ஈடுபட்ட ஆசிரியர்களை மிரட்டி பணிய வைப்பதற் காகவே தற்காலிக ஆசிரி யர் நியமன அறிவிப்பை வெளியிட்டு ஏமாற்றிவிட்டதாக வும், இதை நம்பி ஏற்கெனவே செய்த வேலையையும் விட்டு விட்டதாகவும் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட தற்காலிக ஆசி ரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News