Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 9, 2019

இந்திய வனப்பணி தேர்வு: சங்கர் அகாதெமி மாணவர்கள் 34 பேர் வெற்றி

இந்திய வனப்பணிகளுக்கான இறுதித்தேர்வில், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் 34 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.



மத்திய குடிமைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2018-ஆம் ஆண்டின் இந்திய வனப்பணிகளுக்கான இறுதித்தேர்வு முடிவுகள் கடந்த 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்திய வனப்பணிகளுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஜனவரி 28 முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது. 6 லட்சம் பேர் எழுதிய குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஜூன் 6-இல் நடைபெற்றது. 223 பேர் பங்கேற்ற நேர்முகத் தேர்வில் 89 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.



இவர்களில் 14 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்திய வனப்பணி தேர்வில் வெற்றி பெற்ற 89 பேரில், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் 34 மாணவர்களும் அடங்குவர். அகில இந்திய அளவில் மூன்றாம் இடத்தை ஜிவானி கார்த்திக்கும், நான்காம் இடத்தைப் ஜெயகுமரனும், எட்டாம் இடத்தை திருக்குறள் என்பவரும், ஒன்பதாம் இடத்தை ஆஞ்சல் ஸ்ரீவாஸ்தவாவும் பெற்றனர். இந்த மாணவர்கள் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பயிற்சி பெற்று முதல் 10 தரவரிசைக்குள் வந்தவர்கள் என சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular Feed

Recent Story

Featured News