Friday, February 1, 2019

366 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத 366 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போதிய விளையாட்டு மைதானம் இல்லை, கழிவறை, குடிநீர், தீ தடுப்பு, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும், கூடுதல் கட்டணம் வசூலித்து அங்கீகார விதிகளை மீறி செயல்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.



இதனையடுத்து, மே மாதத்திற்குள் அங்கீகாரம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறினால் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.



தேர்வுகள் நெருங்கி உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதற்கிடையே, பல பள்ளிகள் அரசு விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News