Sunday, February 17, 2019

இரண்டு ரூபாயில் 420 கி.மீ இயங்கும் பைக்: இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு


திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தண்ணீரில் இருசக்கர வாகனத்தில் இயக்கி, வாகனங்களை இயக்க பெட்ரோல், டீசல் தேவையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.



திருச்சி மாவட்டம் கருமண்டபம் மாருதி நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் ராமச்சந்திரன் - உஷா தம்பதியினரின் மகன் லட்சுமணன்(29). இவர் எம்எஸ்சி படித்திருந்தாலும், தனது 10ம் வகுப்பு முதலே ஏதேனும் கண்டுபிடிப்பு மேற்கொண்டு சாதனைபுரியவேண்டும் என்ற முனைப்பிலேயே பள்ளிகாலம் முதல் வளர்ந்து வந்தவர். எனவே, அதோடு நின்று விடாமல் பைக் மெக்கானிசம் குறித்தும், பகுதிநேரமாக ஆட்டோமொபைல், மோட்டார், ஏசிமெக்கானிசம், எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் என பட்டயப்படிப்புகளை நிறைவுசெய்தார்.




இதை தொடர்ந்து கடந்த 2006ம்ஆண்டு முதல் தனது கனவான தண்ணீரில் இருசக்கர வாகனத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 6 மாதங்களில் தண்ணீரில் வாகனத்தை இயக்கினாலும் கூட முழு வடிவம் கொடுப்பதற்காக, தொடர்ந்து தனது தண்ணீர் பைக்கிலேயே வலம் வந்து சிறு சிறு குறைகளையும் நீக்கி முழு வடிவம் கொடுத்துள்ளார். அவர் கண்டுபிடிப்பான தண்ணீர் பைக்கில் “வாக்குவம் டியூபில்” 1லிட்டர் தண்ணீரை ஊற்றி, அதிலிருந்து தாது உப்புக்கள் அடங்கிய ரசாயன பவுடரை பயன்படுத்தி ஹைட்ரஜனை தனியாக பிரித்து, கார்பன் டியூப் வழியாக மின்சாரமாக மாற்றப்படுவதுடன், பைக்கில் உள்ள பேட்டரில் மின்சாரம் சேமிக்கப்பட்டு அதன்மூலம் மோட்டர் பைக்கை இயக்கிவருகிறார்.



இதற்கு தேவைப்படும் 20கிராம் தாது உப்புக்கள் அடங்கிய ரசாயனபவுடர் விலை ரூ.2 ஆகும். இதனைக்கொண்டு அதிகபட்சமாக 35 கி.மீ வேகத்தில் இயக்கலாம் ன்றும் 420 கி.மீ வரை இயக்கமுடியும் எனவும் லட்சுமணன் கூறுகிறார். இந்த கண்டுபிடிப்பிற்காக, ரூ 13 லட்சம் செலவு செய்த பிறகே தனது கண்டுபிடிப்பை முழுமையாக வெற்றியாக்கிய லட்சுமணன், அதிக அளவு பைக்குகளை உற்பத்திசெய்யும்போது 40ஆயிரத்திற்குள் உற்பத்திசெய்யமுடியும் என்று தெரிவிக்கிறார். தோல்விகள் பல கண்டாலும் துவண்டு விடாமல் செயல்பட்டு வெற்றியினை அடைந்த லட்சுமணன், தனது கண்டுபிடிப்பை மக்களுக்கு விரைவில் கொண்டுசேர்ப்பேன் என்றும் அதற்காக தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



மேலும், இதனை கார் மற்றும் இதர வாகனங்களுக்கும் மாற்றியமைத்து பயன்படுத்த முடியும் என்கிறார். ஒட்டுமொத்த குடும்பத்தினரும், நண்பர்களும் அளித்த ஊக்கத்தினாலும், தனது விடா முயற்சியினாலும் சாதனைபுரிந்து இந்த உலகத்தினை மாசு இல்லாத உலகமாக மாற்ற முயலும் லட்சுமணனின் பைக், மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.ஏற்கனவே மூலிகை பெட்ரோல் தயார் செய்த தமிழக விஞ்ஞானி ராமர்பிள்ளையின் கண்டுபிடிப்பை உதாசினப்படுத்தி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் இந்த கண்டுபிடிப்பையாவது தரணிக்கு கொண்டு சேர்த்து எரிபொருளை சேமிக்க வழிவகைசெய்யுமா? அங்கீகாரம் வழங்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Popular Feed

Recent Story

Featured News