Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 12, 2019

4 குழந்தைகள் பெற்றால் வருமான வரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படும்

ஹங்கேரியில் 4 குழந்தைகள் பெற்றால் வருமான வரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படும் : பிரதமர் விக்டர் ஆர்பன்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரி நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருவதால் மக்கள் தொகை எண்ணிக்கை பெரும் பின்னடைவை சந்திக்கிறது.

இதனால் நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கும் வகையில் பிரதமர் விக்டர் ஆர்பன் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை நடத்தி வருகிறது. அந்தவகையில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, வருமானவரி செலுத்துவதிலிருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு வழங்கப்படுவதாக பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்துள்ளார். மேலும், இளம் தம்பதியருக்கு 36 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும் என்றும் அந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்த பிறகு கடன் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News