Wednesday, February 20, 2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமையில் நடந்தது.


புதுக்கோட்டை,பிப்.19 : புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமையில் நடைபெற்றது.



புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தேர்வுக் கூட அரங்கில் வட்டாரக்கல்வி அலுவலர்கள்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ,ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 5மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வினை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை வகித்துப் பேசியதாவது:இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருக்கிறது. இருபது மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகள் தேர்வு மையமாக செயல்படும்.இருபது மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகள் அருகில் உள்ள தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுத வேண்டும்.வினாத்தாள் கட்டுகள் குறுவளமையங்கள் மூலம் வழங்கப்படும்.

மாதிரி வினாத்தாள் பட்டியல் பள்ளிக் கல்வி துறையிலிருந்து அனுப்பி வைக்கப்படும்.வட்டாரக்கல்வி அலுவலர்கள்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் தேர்வு மையங்களுக்கு தேவையான வினாத்தாள் எண்ணிக்கையினை தமிழ்,ஆங்கில மீடியம் வாரியாக தொகுத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். வட்டாரக்கல்வி அலுவலர்களும்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்களும் அவரவர் எல்லைப்பகுதிகுட்பட்ட அனைத்துப்பள்ளிகளும் மாணவர்கள் வருகைப்பதிவினை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாமலைரஞ்சன்,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.அமுதாராணி,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ரெ.ஜீவானந்தம்,இரா.கபிலன் மற்றும் புதுக்கோட்டை ,இலுப்பூர்,அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர்கள் ,வட்டாரக்கல்வி அலுவலர்கள்,வட்டார வளமைய மேற்பார்வை யாளர்கள்,ஆசிரியப்பயிற்றுநர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Popular Feed

Recent Story

Featured News