ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை தெரிவித்தார்.
கட்டாயத் தேர்ச்சி முறைக்குப் பதிலாக 5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தலாம் என்றும் அதில் தோல்வி அடைபவர்களுக்கு உடனடி மறு தேர்வு நடத்தலாம் என்றும் மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியிருந்தது. இது குறித்து மாநிலங்கள் முடிவெடுக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து அமைச்சரவையைக் கூட்டி முதல்வர் முடிவெடுப்பார். அதற்கு முன் யார் எது கூறினாலும் கவலைப்படத் தேவையில்லை என்றார்.