நிகழாண்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
ஈரோட்டில் ரூ. 54.58 கோடி மதிப்பில் பிரப் சாலை,பெருந்துறை சாலை, அரசு மருத்துவமனை சாலையை இணைக்கும் வகையில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தின் திறப்பு விழா பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பாலத்தைத் திறந்துவைக்கிறார்.ஈரோடு மாவட்டத்தில், அரசு மருத்துவமனை, பாலம் உள்பட பல்வேறு பணிகள் நிறைவடைந்துள்ளன.
மேலும், பல பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முடிந்த பணிகளைத் தொடக்கிவைத்து, புதிய பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார்.5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்பதை பலரும் தவறாகப் புரிந்துள்ளனர். நிகழாண்டில் அந்த பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. வரும் ஆண்டில் நடத்துவது குறித்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கி, அதன் பின் முறையாக அறிவிக்கப்படும். நிகழாண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை. பெற்றோரும், மாணவர்களும் இதற்காக அச்சப்படத் தேவையில்லை என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.