வேளாண்மையில் இரு மடங்கு உற்பத்தி, விவசாயிகளுக்கு மும்மடங்கு வருமானம் என்னும் கொள்கையை அடிப்படையாகக்கொண்டு, வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் உத்தரபிரதேசத்திலுள்ள கோரக்பூரில் 24-ந்தேதி (நாளை மறுநாள்) பிரதமரால் தொடங்கப்பட உள்ளது.
அதே நாளில், தமிழ்நாட்டில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்-அமைச்சர், மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி முன்னிலையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
விவசாயிகள், பயிர் சாகுபடிக்கு தேவையான இடு பொருட்களை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்து, அதிக விளைச்சல் பெற்று, பண்ணை வருவாயை உயர்த்த உதவியாக ஒரு தவணைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளாக, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 2 ஹெக்டேர் வரையிலான சாகுபடி நிலங்களை உடைய தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
முதல் தவணை தொகையாக தகுதியுள்ள ஒவ்வொரு சிறு, குறு விவசாய குடும்பத்திற்கும் ரூ.2 ஆயிரம் வீதம் இவ்விழாவில் வழங்கப்பட உள்ளது. விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்ட விளக்க சிறப்புக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் துணை முதல்-அமைச்சர், வேளாண் துறை அமைச்சர், தலைமை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் வேளாண் சார்ந்த தொழில்நுட்ப கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.