உணர்வகற்றும் மருந்தின் வாயிலாக நோயாளிக்கு உண்டாகும் மயக்க நிலை ஆழ்ந்த உறக்கத்திற்கு இணையானதுஎனலாம். நம்மை நனவு நிலையில் வைத்திருப்பதற்குக் காரணமான சிறப்பு உயிரணுத் தொகுதிகள் நமது மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன.
இது நுண்வலைப்படிவ அமைப்பு (reticular formation) எனக் கூறப்படுகிறது.
மூளையின் பிற பகுதிகளுடன் இவ்வமைப்பு கொண்டிருக்கும் தொடர்பைப் பொறுத்தே நமது நனவு நிலை அமைகிறது. வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி சோடியம், பொட்டாசியம் அயனிகளைப் (ions) பரிமாறிக் கொள்வதின் வாயிலாக உண்டாகும் சிறு அளவிலான மின் உற்பத்தியின் காரணமாக மேற்கூறிய உயிரணுக்கள் பிற பகுதிகளுடன் தொடர்பு கொள்ள இயலுகிறது. உணர்வகற்றும் மருந்தானது மூளையின் உயிரணுப் பரப்பில் மேற்கூறிய வேதி வினையையும் மின் தொடர்பையும் தடை செய்கிறது; இதன் காரணமாகவே நனவு நிலை நீங்கி மயக்க நிலை உண்டாகிறது.